விற்பனை சொன்னா வாங்க வருவாங்கன்னு பாத்த போலீஸ் வந்துட்டாங்க!!

ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக கூறிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்!
 
விற்பனை சொன்னா வாங்க வருவாங்கன்னு பாத்த போலீஸ் வந்துட்டாங்க!!

தற்போது நாட்டில் அதிகமாக பேசப்படுவது கொரோனா. காரணம் என்னவெனில் கடந்த ஆண்டே இந்நோயினை கட்டுப்படுத்தப்பட்டது ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக இந்நோய் தாக்கம் அதிகரித்து இந்தியாவை மிகவும் கவலையில் தள்ளிவிட்டது. பல நாடுகளும் இந்தியாவின் நிலைமை கண்டு மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர். பலரும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர் இந்திய அரசின் சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு இரண்டு விதமான தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன.lockup

மேலும் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிகழ்கிறது.  ரெம்டெசிவிர் என்ற தடுப்பூசியின் தட்டுப்பாடும் அதிகம் நிலவுகிறது .இதனால் பல மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் இந்த ரெம்டெசிவிர்  மருந்தினை கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த மருந்தானது விற்பனைக்கு உள்ளதாக கூறிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் சமூக வலைதளங்களில் இந்த தகவலை பதிவிட்டதால் காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் ராஜ்குமார் ,ஆதித்தியன், சையது ஆவர். மேலும் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு மருந்துகளையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் இவை வங்கதேசத்திலிருந்து மருந்தை இறக்குமதி செய்து கள்ளச்சந்தையில் விற்றது போலீசார் விசாரணையில் அம்பலமானது.இவர்கள் மருந்துக்கு விலை நிர்ணயிக்கவில்லை மனிதர்களின் உயிரை விலை  நிர்ணயிக்கின்றனர் என்ற சம்பவம் மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

From around the web