பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த நபருக்கு கொரோனா: அலறியடித்து ஓடிய சக பயணிகள்

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இருந்து வந்த போனில் அவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்தப் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் பெரும் அச்சம் அடைந்து அலறியடித்த ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 54 வயது நபர் ஒருவருக்கு அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருடைய பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததால் அவருக்கு போன் செய்து
 

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த நபருக்கு கொரோனா: அலறியடித்து ஓடிய சக பயணிகள்

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இருந்து வந்த போனில் அவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்தப் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் பெரும் அச்சம் அடைந்து அலறியடித்த ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 54 வயது நபர் ஒருவருக்கு அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருடைய பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததால் அவருக்கு போன் செய்து உங்களுக்கு கொரோனா உள்ளதாகவும் உடனடியாக மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆகும்படியும் வற்புறுத்தினர்
சுகாதாரத்துறை அதிகாரிகள் போன் பேசியபோது அவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த தகவலை கேட்டதும் அவர் உடனடியாக பேருந்தை நிறுத்தும்படி கூறி தனக்கு கொரோனா இருப்பதாகவும் தன்னை இங்கேயே இறக்கி விடவும் என்றும் கூறினார்.

இதனைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த அந்த பேருந்தில் இருந்த சகபயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அதன் பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பேருந்து இருக்குமிடத்தைக் கூறினார்கள். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வந்து அந்த பேருந்திலிருந்த கொரோனா நோயாளியை அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து அந்த பேருந்து பணிமனைகள் கொண்டு செல்லப்பட்டு கிருமி நாசினி தெளித்து அதன் பின்னரே மீண்டும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web