"புலமைப்பித்தன் மறைவு;" இரங்கல் தெரிவிக்கும் கட்சித் தலைவர்கள்!!

அதிமுக முன்னாள் அவைத் தலைவர் புலமைபித்தன் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
pulaimaipithan

தற்போது நம் தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. மேலும் இந்த அதிமுக 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு தொண்டர்களை மிகவும் குழப்ப நிலையில் காணப்பட்டது இந்த சட்டமன்ற தேர்தல். ஏனென்றால் அதிமுக அமமுக என்று 2 கட்சிகளும் சட்டமன்ற தேர்தலில் சந்தித்ததால் தொண்டர்களுக்கு இடையே மிகவும் குழப்பம் நிலவியது.vaiko

குழப்பத்தில் மத்தியிலும் தற்போது எதிர்கட்சியாக உள்ளது இந்த அதிமுக. இத்தகைய இக்கட்டிலிருந்து தற்போதுதான் வெளிவந்த நிலையில் மேலும் ஒரு சோகமான சம்பவம் இந்த அதிமுக கட்சிக்கு நிகழ்ந்துள்ளது. அதன்படி அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலமைபித்தன் தற்போது காலமானார். அவருக்கு அதிமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைப்பாளரும் கூட்டாக இரங்கல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் வரிசையாக அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார், அதன்படி தன்மான உணர்வும் தமிழ் இனப்பற்றும் கொண்டவர் இந்த புலவர் புலமைப்பித்தன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் சிறந்த பாடகருக்கான விருது பெற்றவர் கவிஞர் புலமை பித்தன் என்றும் ஜி கே வாசன் கூறியுள்ளார்.

From around the web