நவம்பரில் கட்சி அறிவிப்பு, மதுரையில் பொதுக்கூட்டம்: ரஜினியின் அதிரடி திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளிவந்தாலும் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வரப் போவதை ரஜினிகாந்த் உறுதி செய்தார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளிவந்தாலும் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வரப் போவதை ரஜினிகாந்த் உறுதி செய்தார்

இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் அதன் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் அல்லது மே மாதம் அவர் கட்சி தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கட்சி தொடங்குவது காலதாமதப்பட்டது

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் வரும் நவம்பர் மாதம் ரஜினிகாந்த் தனது புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் கெடுபிடிகள் இல்லாமல் இருந்தால் மதுரையில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்தி கட்சி பெயரையும் கொடியையும் கொள்கையையும் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web