"படிப்படியாக குறைந்து வந்ததால் பகுதி நேர ஊரடங்கு"; ஜூன் 7-ஆம் தேதி வரை!

டெல்லியில் ஜூன் 7-ஆம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்!
 
corona

தற்போது நம் இந்தியாவில் கடந்த ஆண்டு கூறிய பேச்சே இந்தாண்டு நிலவுகிறது. காரணம் என்னவெனில் கடந்த ஆண்டு நம் இந்திய நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு என்ற பேச்சு அதிகம் காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் தற்போது பல மாநிலங்களில் இந்த ஊரடங்கு என்ற பேச்சு அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு இந்த ஊரடங்கு முதன்முதலாக மாநிலத்தில் மிகவும் தைரியமாக அமல்படுத்தியவர் அரவிந்த் கெஜ்ரிவால். அவர்தான் ஆட்சிசெய்யும் மாநிலத்தில் விடுமுறை தினங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தினார்.kejiriwal

மேலும் அதனை தொடர்ந்து ஒருவார காலத்திற்கு முழு  ஊரடங்கு அமல்படுத்தினார். இதனை கண்ட பல மாநிலங்களும் டெல்லியைத் தொடர்ந்து தங்களது மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தினார். மேலும் இந்த டெல்லியில்தான் கொரோனாவின் உச்சம் காணப்பட்டது என்றும் கூறலாம். மேலும் அங்கு தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக நிலவியது. மேலும் ஆக்சிஜன் இன்றி பலரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தகைய டெல்லியில் தற்போது இந்த நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக காணப்படுகிறது.

இதனால் டெல்லி மக்கள் ஓரளவு மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் தற்போது டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி டெல்லியில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தஊரடங்கு 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து  இந்த ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

From around the web