ஊரடங்கை உபயோகிக்கும் பெற்றோர்கள்! அதிகரிக்கும் குழந்தை திருமணம்!பொங்கிய கமலஹாசன்!!

தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் நடைபெறும் அனைத்து குழந்தை திருமணங்களை உடனடியாக தடை செய்ய மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரான கமலஹாசன் கூறியுள்ளார்!
 
childmarriage

மக்கள் மனதில் உலகநாயகன் என்ற பெயரைப் பெற்றிருந்த நடிகர் கமலஹாசன். மேலும் அவரது நடிப்பிற்கு இன்றளவும் பலரும் ஈடு படுத்த முடியாத அளவிற்கு உள்ளது என்று கூறலாம். இத்தகைய உலகநாயகன் கமலஹாசன் திடீரென்று அரசியலுக்கு வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .அதன்படி அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ கட்சி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். மேலும் அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதில் பெரும்பாலானோர் படித்த மற்றும் துறையில் சிறந்த உறுப்பினர்களை இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.kamal

 அவரின் கட்சி இந்த கட்சி சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. மேலும் கமலஹாசன் கடும் போட்டியில் தோல்வியை தழுவினார். அவர் தற்போது செய்தியாளர்களை சந்தித்து சிலவற்றை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் முழு ஊரடங்குவின்போது நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் சேலத்தில் 98, தர்மபுரியில் 192 உள்ளிட்ட மொத்தம் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது என்றும் புள்ளி விவரங்களை கூறினார்.

மேலும் தமிழக அரசு குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் சமூக நலத்துறை அமைச்சகம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

From around the web