குழந்தை பிறந்த சில நிமிடங்களில் தெருவில் வீசிய பெற்றோர்கள்: சிசிடிவியில் அதிர்ச்சி காட்சி

 

கேரளாவைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தையை சில நிமிடங்களில் தெருவில் வீசி விட்டுச் சென்றது காட்சி சிசிடிவி யில் இருந்து தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியைச் சேர்ந்த அமல் குமார் மற்றும் அபர்ணா தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாக தெரிகிறது 

இந்த நிலையில் அபர்ணாவுக்கு வேறு ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக கர்ப்பமானதாகவும், இந்த விஷயம் அமல்குமாருக்கு தெரிய வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து அமல்ராஜ் தனது மனைவியுடன் கலந்து பேசிய போது தன்னுடைய காதலர் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த குழந்தையை விட்டுவிட்டு வந்தால் தான் ஏற்றுக்கொள்வதாக அமல்குமார்கூறியுள்ளார் 

இந்த நிலையில் திடீரென அபர்ணாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதை அமல்குமாரும், அபர்ணாவுக்கும் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது வழியிலேயே குழந்தை பிறந்திருக்கிறது. இதனையடுத்து காரிலேயே பிறந்த குழந்தையை அந்த தம்பதியினர் தெருவில் வீசி விட்டு விட்டு சென்றுவிட்டனர் என்பது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் இருந்து தெரியவருகிறது

இதனை அடுத்து அந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் அமல்ராஜ் மற்றும் அபர்ணா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

From around the web