அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினந்தோறும் 3000க்கும் மேற்பட்டோர்களும், சென்னையில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் கொரோனா வைரஸ் விடாமல் துரத்தி வருவது பெரும் கவலைக்குரிய தகவலாக உள்ளது ஏற்கனவே தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் ஆகியோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினந்தோறும் 3000க்கும் மேற்பட்டோர்களும், சென்னையில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் கொரோனா வைரஸ் விடாமல் துரத்தி வருவது பெரும் கவலைக்குரிய தகவலாக உள்ளது

ஏற்கனவே தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் ஆகியோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததாகவும், இதனை அடுத்து அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் சதன் பிரபாகரன் மனைவி மற்றும் மகனுக்கும் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மூவரும் தற்போது தனி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் ஏற்கனவே 5 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு அமைச்சருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏவையும் கொரோனா தாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web