அதிமுக பெண் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருவது தெரிந்ததே. நேற்றும் சுமார் 6000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பதும், சுமார் 100 பேர் பலியாகினர் என்ற தகவலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் எம்பிக்கள் உள்பட பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம் இந்த நிலையில்
 
அதிமுக பெண் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருவது தெரிந்ததே. நேற்றும் சுமார் 6000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பதும், சுமார் 100 பேர் பலியாகினர் என்ற தகவலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் எம்பிக்கள் உள்பட பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

கடந்த மாதம் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யாவின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின் அவர் குணமாகி வீடு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web