மக்கள் மத்தியில் பீதி! 100க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் செயலிழப்பு!

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழப்பு!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. மேலும் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதன் மத்தியில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே  தங்க நகைகளையும் பணத்தையும் மற்றும் பல பொருட்களையும் கைப்பற்றி வருகின்றனர்.

bomb

இதன் மத்தியில் கும்மிடிப்பூண்டி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அங்கு இன்று அதிர்ச்சிகரமான செயல் ஒன்று நிலவியது. அது என்னவெனில் அந்த சிப்காட் தொழிற்பேட்டையில் இன்று 100க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் இருந்ததாக தகவல் வெளியானது. மேலும் அந்த வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று அந்த நூறுக்கு மேற்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். சிப்காட் தொழிற்சாலையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  ராமசந்திரபுரம் சென்று வெடிகுண்டுகள் செயலிழக்க பட்டதாக தகவல் வெளியாகிறது.

மேலும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் பழைய  வெடிகுண்டுகள் எனவும் தகவல் வெளியானது. இதற்காக அப்பகுதியில் ராணுவம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். மேலும் 22 உலையில் இருந்து 10டன்க்கும் அதிகமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு செயல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. வெளிநாட்டில் இருந்து பழைய இரும்பு என்ற பெயரில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web