ஊர்ந்து செல்ல பாம்பா? பல்லியா? தேர்தல் பரப்புரையில் கேள்வி!

சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் மிகவும் மும்மரமாக நடைபெற உள்ளது. இதில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி பாஜக கட்சியையும் பாமக கட்சியையும் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. சில தினங்களுக்கு முன்பு அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அதன்படி எடப்பாடி தொகுதியில் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என்றும் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுவார் எனவும் கூறியது. தற்போது மேலும் அதிமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர், அதிமுக அரசின் போராட்டத்தில் தான் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது எனவும் அவர் கூறினார்.
மேலும் டெல்டா பகுதிகளில் பிரச்சனைக்கு காரணம் திமுக ஆட்சிதான் எனவும் அவர் கூறினார். மேலும் விவசாயிகள் மீது எந்த அக்கறையும் திமுகவுக்கு கிடையாது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் முதல்வர் பழனிசாமி ஊர்ந்து செல்ல பாம்பா? பல்லியா?என்று தேர்தல் பரப்புரையில் ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார். மேலும் அப்பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.