இந்தியாவை விட பாகிஸ்தான் பெட்டர்: ராகுல்காந்தி விமர்சனத்தால் சர்ச்சை

 

இந்தியாவைவிட கொரோனா நிலவரத்தை பாகிஸ்தான் மிகச் சிறப்பாக கையாண்டு உள்ளது என பாகிஸ்தானுக்கு ஆதரவாக ராகுல்காந்தி விமர்சனம் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா நிலவரத்தை இந்தியாவைக் காட்டிலும் பாகிஸ்தான் உள்பட ஒருசில நாடுகள் சிறப்பாக கையாண்டு இருக்கின்றன என்று தெரிவித்து பதிவு செய்துள்ளார் 

மேலும்2020-21 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்டுள்ள கணிப்பில் வங்கதேசம், மியான்மர், நேபாளம், சீனா, பூடான், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளை காட்டிலும் இந்தியா பின்தங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான அட்டவணையையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து மத்திய பாஜக அரசு இன்னொரு முக்கிய சாதனை படைத்து உள்ளது என கிண்டலாக பதிலளித்துள்ளார் 

ஆனால் இந்த கிண்டலுக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் நாடு என்பது இந்தியாவின் ஒரு மாநிலத்திற்கு கூட சமம் இல்லை என்றும், அதே போல் மியான்மர் நேபாளம் சீனா பூடான், இலங்கை ஆகிய அனைத்து நாடுகளின் பரப்பளவை ஒப்பிட்டாலும் இந்தியாவுக்கு இணையாக வராது என்றும் எனவே இந்தியாவைம் அந்த சிறிய நாடுகளோடு ஒப்பிடுவது முட்டாள்தனமானது என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

From around the web