காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்..! இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்

 
காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்..! இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்

கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் மோதிக் கொள்வதும் குறிப்பாக பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களை தாக்கி வருவதுமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன 

பிரதமர் மோடி பதவியேற்ற பின் இந்த தாக்குதல் குறைந்திருந்தாலும் அவ்வப்போது தாக்குதல் நடைபெற்று வருவதும் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்படுத்தி ஏற்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது 

kasmir

இந்த நிலையில் இன்று திடீரென பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த இந்திய படையினர் பதில் தாக்குதல் செய்ததில் பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

காஷ்மீரின் முக்கிய பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இரு தரப்பிலும் சேர்ந்து பதினொரு பேர் கொல்லப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web