புதுச்சேரியில் ஆக்சிஜன் தடுப்பூசி இருப்பு, தேவை எவ்வளவு? கேள்வி எழுப்பும் உயர்நீதிமன்றம்!

புதுச்சேரி மாநிலத்தில் ஆக்சிசன் வென்டிலேட்டர் ரெம்டெசிவிர் தடுப்பூசி இருப்பு மற்றும் தேவை எவ்வளவு என்று பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
 
புதுச்சேரியில் ஆக்சிஜன் தடுப்பூசி இருப்பு, தேவை எவ்வளவு? கேள்வி எழுப்பும் உயர்நீதிமன்றம்!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற்ற தினத்தில் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெற்றது.புதுச்சேரியில் 30 தொகுதிகள் உள்ளன.புதுச்சேரியில் தேர்தல் போது மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புதுச்சேரியில் 144 தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.புதுச்சேரியில் தற்போது துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை சௌந்தரராஜன் உள்ளார். அவர் சில தினங்களுக்கு முன்பாக பல்வேறு விதிகளை விதித்திருந்தார்.highcourt

மேலும் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அபராதம் விதித்து அவர்களுக்கு முக கவசம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். தற்போது கொரோனாஅதிகரித்துக் காணப்படுகின்றன, புதுச்சேரியில் தடைகளும் நடைமுறையில் உள்ளன. புதுச்சேரி தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு மற்றும் கேள்வி ஒன்றை அளித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் வெண்டிலேட்டர், தடுப்பூசி போன்றவை இருப்பு மற்றும் தேவை எவ்வளவு என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் இதனை திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் ஊரடங்கு அமல் படுத்த கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் புதுச்சேரியில் கவர்னர் ஆட்சி என்று அழைக்கப்படும் தலைமைச் செயலாளர் பல்வேறு  உத்தரவுகளையும் தடைகளையும் விதிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web