தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்போது ஆக்சிசன் தேவை அதிகரிப்பு!

கொரோனா காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிசன் தேவையானது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது!
 
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்போது ஆக்சிசன் தேவை அதிகரிப்பு!

இந்தியாவில் கடந்த ஆண்டில் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தாக்கமானது தற்போது மீண்டும் எழுந்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது தெரிய வந்தது. இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கொரோனா அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது. தலைநகரமான சென்னையில் கொரோனா அதிகரித்துள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

corona

இதற்காக கொரோனாநோயாளிகள் அரசு மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். ஆனால் அரசு மருத்துமனை  தற்பொழுது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிசன் தேவை அதிகரிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தீவிரமடைந்ததால் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிசன் தேவை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் இந்த ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிசன்  தேவை 352 கிலோ லிட்டரிலிருந்து 716.57 கிலோ லிட்டர் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது .மேலும் அதிகரித்து வரும் ஆக்சிசன்  தேவையை சமாளிக்கமருத்துவ அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் உள்ளனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 63 கிலோ லிட்டர் ஆக்சிசன்  கொள்முதல் அதிகரித்துள்ளதாகவும் கூறபடுகிறது .மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு நிலையை தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

From around the web