ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்: பெரும் பரபரப்பு

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. இதனையடுத்து இந்தியாவிலும் இந்த தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து: மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலை., கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை திடீர் நிறுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சோதனையில் பங்கேற்றவருக்கு விளக்க முடியா பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்தே இந்த கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web