3 மணி நேரத்தில் 4 லட்சம் டவுன்லோடுகள்: நீட் தேர்வில் மாணவர்கள் ஆர்வமா?

இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 முதல் 6 வரை ஜே.ஈ.ஈ தேர்வும், செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வும் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்வுகளை தடுத்த நிறுத்த பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டும் தேசிய தேர்வு முகமை கண்டிப்பாக இந்த தேர்வுகளை நடத்தியே தீருவது என்று உறுதி செய்துள்ளது மேலும் இந்த தேர்வுக்காக சுமார் 3600 தேர்வு மையங்கள் தயாராக இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு மாணவர்களுக்கு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்
 

3 மணி நேரத்தில் 4 லட்சம் டவுன்லோடுகள்: நீட் தேர்வில் மாணவர்கள் ஆர்வமா?

இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 முதல் 6 வரை ஜே.ஈ.ஈ தேர்வும், செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வும் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்வுகளை தடுத்த நிறுத்த பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டும் தேசிய தேர்வு முகமை கண்டிப்பாக இந்த தேர்வுகளை நடத்தியே தீருவது என்று உறுதி செய்துள்ளது

மேலும் இந்த தேர்வுக்காக சுமார் 3600 தேர்வு மையங்கள் தயாராக இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு மாணவர்களுக்கு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இன்று முதல் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்களை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இன்று மதியம் 12 மணி முதல் டவுன்லோட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது

எனவே நீட் தேர்வு எழுத மாணவர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் அரசியல்வாதிகள்தான் இது குறித்து விளம்பரம் தேடி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 3 மணி நேரத்தில் 4 லட்சம் ஹால் டிக்கெட்டுகள் டவுன்லோட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web