எங்கள் தடுப்பூசி தான் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது!

சந்தையில் மிக குறைந்த விலையில் கிடைப்பது சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி தான் இந்தியா கூறியுள்ளது!
 
எங்கள் தடுப்பூசி தான் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது!

மக்கள் மத்தியில் தற்போது கண்ணுக்கு தெரியாமல் வளர்ந்துள்ள கொரோனாக்கு எதிராகப் பல நாடுகளும் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் பெரும் முயற்சியினால் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டன. அவை தற்போது மத்திய அரசின் சார்பில் பல்வேறு மாநில மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவிடம் இருந்தும் இந்தியாவானது  ஸ்புட்னிக் வி தடுப்பூசிணையும் கொள்முதல் செய்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .covid

 சில தடுப்பூசிகள் அனைத்தும் கள்ள சந்தையில் விற்கப் படுவதாகவும் கூறப்பட்டன. மேலும் பல மருத்துவமனைகளில் தடுப்பூசிகளின் விலையானது தாறுமாறாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தடுப்பூசி நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியினை பற்றி விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி இந்தியாவில் சந்தைகளில் மிக குறைந்த விலையில் கிடைப்பது சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி தான் என்று கூறியுள்ளது சீரம் இந்தியா நிறுவனம். மேலும் இந்தியாவில் விற்கப்படும் விலையுடன் வெளிநாட்டில் விற்கப்படும் விலையை ஒப்பிடக் கூடாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இந்தியாவில் தடுப்பூசி விலை நிர்ணயம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு சீரம் இந்தியா இந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் முன்பணம் தந்ததால் ஆரம்பகட்ட வினியோகங்களுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்ததாகவும் கூறப்படுகிறது .மேலும் தடுப்பூசியினை குறைந்த விலைக்கு அரசு, சந்தை விலையில் தனியாருக்கு விற்பனை செய்கிறோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

From around the web