நம் எதிர்க்கட்சி தலைவர் போட்டுக்கொண்டார் இரண்டாவது தவணை தடுப்பூசி!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொரோனாவுக்கு  இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
 
நம் எதிர்க்கட்சி தலைவர் போட்டுக்கொண்டார் இரண்டாவது தவணை தடுப்பூசி!

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் முன்னர் அறிவித்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகள் களம் இறங்கி இருந்தன. குறிப்பாக தமிழகத்தின் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக  தன்னுடன் கூட்டணியாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்து சந்தித்துள்ளன. மேலும் திமுகவில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

covid 19

மேலும் அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து அங்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தேர்தலின் போது அவர் தமிழகம் முழுவதும் சென்று வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்.  தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேலும் தற்போது தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

அதற்கு எதிராக பலரும் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதற்கெதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட போட்டோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டதாக தெரியப்படுகிறது. திமுக தலைவரும் இந்த ஆட்கொல்லி நோயான கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web