சாதாரண ஆம்புலன்ஸ்னா 1500 ரூபாய்! ஸ்பெஷல் ஆம்புலன்ஸ்னா 2000 ரூபாய்!! 

தமிழகத்தில் ஆம்புலன்ஸ் கட்டண விலை நிர்ணயத்தை வெளியிட்டுள்ளது தமிழக அரசு!
 
சாதாரண ஆம்புலன்ஸ்னா 1500 ரூபாய்! ஸ்பெஷல் ஆம்புலன்ஸ்னா 2000 ரூபாய்!!

தற்போது நாடெங்கும் கொரோனா வேகமாக வீசுகிறது. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.  நாட்டு மக்கள் மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு திட்டங்களையும் கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக போராடுகிறது கொரோனா நோயை கட்டுபடுத்த முடியவில்லை. கொரோனா நோய் மட்டும் அதிகரிக்கவில்லை நோயின் போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ஆக்சிசன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இதனால் பல மாநில அரசுகள் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்சிசன் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.tamilnadu

 பல கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நகர்ப்புறங்களிலும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி குறைவாக உள்ளது.  தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஆம்புலன்ஸ் சேவை நடைமுறையிலுள்ளது. ஆம்புலன்ஸ் கட்டணம் தற்போது தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல சாதாரண ஆம்புலன்சுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு 1500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

மேலும் சாதாரண ஆம்புலன்ஸ் காலையில் 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோமீட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் அடிப்படை உயிரை காக்கும் வசதிகளுடன்கூடிய ஆம்புலன்சுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு 2 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது .அடிப்படை உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்சில் 10 கிலோ மீட்டருக்கு பிறகு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு கட்டணம் விலையை நிர்ணயித்து உள்ளது.

மேலும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய முதல் 10 கிலோ மீட்டர்கள் செல்வதற்கு 4000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது மேலும் 10 கிலோ மீட்டருக்கு பின்னர் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு  பயணிக்க ரூபாய் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு.

From around the web