இன்னும் மூன்று மாதத்தில் "போலீஸ் ஆணையம்" அமைக்க உத்தரவு!

இன்னும் மூன்று மாதத்தில் போலீஸ் ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
 
police

தற்போது படிக்கின்ற இளைஞர்கள் மத்தியில் அரசு வேலை என்றால் அதிகம் கூறுவது போலீஸ் வேலையே.  இளைஞர்களுக்கு போலீஸ் வேலை என்பது லட்சியமாக காணப்படுகிறது. அதற்காக அவர்கள் தங்களது உடலை தகுதிப் படுத்திக் கொண்டே வருகின்றனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை போலீசாருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை கூறியுள்ளது. அதுவும்  போலீசாருக்கு 8 மணி நேரம் வேலை என்று கூறியுள்ளது. மேலும் அவர்களுக்கு ஊதியத்தை 10 சதவீதம் உயர்த்த பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.highcourt

அதோடு மட்டுமல்லாமல் தற்போது இன்னும் மூன்று மாதத்தில் போலீஸ்களுக்கு போலீஸ் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. அதன்படி தமிழகத்தில் இன்னும் மூன்று மாதத்தில் காவலர்களுக்கு ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தக் காவல் துறையின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

மேலும் இதில் மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள காவலர்கள் குழுவில் இடம் பெறவும் உத்தரவிட்டுள்ளது.

From around the web