வாகனங்களில் வெளியே தெரியும்படி ஒட்டப்பட்ட படங்களை நீக்க உத்தரவு!!!

வாகனங்களின் வெளியே தெரியும்படி ஒட்டப்பட்ட படங்களை நீக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை
 
stickers

தற்போது இந்தியாவில் முதன்மை நீதிமன்றம் ஆக உள்ளது உச்ச நீதிமன்றம்.அதனை அடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதிமன்றங்கள் உள்ளன. நம் தமிழகத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உள்ளது. அதன்படி இவ்விரு நீதிமன்றங்களும் அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும். அதன் வரிசையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்போது சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.highcourt

அதன்படி வாகனங்களில் வெளியே தெரியும்படி ஒட்டப்பட்ட படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. மேலும் வாகனங்கள் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்கள் புகைப்படங்கள் ஒட்டி இருந்தாலும் அதையும் நீக்க உத்தரவிட்டுள்ளது. தலைவர்கள், வேறு படங்களை 60 நாட்களில் நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், தலைவர்கள் படங்கள் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாமே தவிர மற்ற எல்லா நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும் நீதிபதிகள் கூறினர். தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடி, விதிமீறி நம்பர் பிளேட்டுகளை நீக்க ஆணையிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 50 % வாகனங்களில் வழக்கறிஞர்கள் ஸ்டிக்கரை ஒட்டி உள்ளனர் என்றும் மனுதாரர் கூறியுள்ளனர்.

வழக்கறிஞர் ஸ்டிக்கரை ஒட்டி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக மனுதாரர் குற்றச்சாட்டை எடுத்துள்ளார். இவ்வாறு ஒட்டி இருப்பது குற்றம் செய்பவர்கள் கூட காவல் துறையிடம் இருந்து தப்பிக்க வாய்ப்பாக அமைகிறது என்றும் மனுதாரர் கூறியுள்ளார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

From around the web