மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய அரசுக்கு ஆணை

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது
 
mentally challenged

தற்போது நம் தமிழகத்தில் மனநல காப்பகம், அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் போன்றவைகள் அதிகரித்துள்ளது. இவை ஒரு பார்வையில் நலமாக காணப்பட்டாலும் மற்றொரு பார்வையில் பார்க்கும் பொழுது இவை மிகக் கொடுமையாக காணப்படுகிறது .இருப்பினும் அவர்களையும் அரசு கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.vaccine

மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அரசுக்கு உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கண்டறிவதற்கான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்க கோரிய வழக்கில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் மனநல காப்பகம் மூலம் 45 பேருக்கு தற்போதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.இதனால் தமிழகத்தில் மீதமுள்ள மன நல காப்பகங்களில் உள்ள அவர்களை கண்காணித்து அவர்களுக்கு முறையான பரிசோதனை செய்த பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web