மகாராஷ்டிராவில் பள்ளி கல்லூரிகளை மூட உத்தரவு!
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Thu, 18 Mar 2021

கொரோனா பாதிப்பானது முதலில் சீனாவில் உருவானது. பின்னர் அங்கிருந்து கொரோனா நாடெங்கும் பரவியது. கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்திய அரசானது முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியது.

தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா அதிகரித்துள்ளதால் பள்ளிகள் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள்,விடுதிகள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.