குற்றாலத்தில் விதி மீறும் தனியார் நீர்வீழ்ச்சியை மூட உத்தரவு!!!

தென்காசியில் உள்ள குற்றாலத்தில் விதி மீறும் தனியார் நீர்வீழ்ச்சியை மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
kutralam

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களும் பல்வேறு விதமான சுற்றுலாத்தலங்களில் பெற்று காணப்படுகிறது. அதன் வரிசையில் தமிழகத்திலேயே மிகுந்த குளிர்ச்சியான மாவட்டமாக காணப்பட்ட மாவட்டங்களின் வரிசையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது தென்காசி மாவட்டம். மேலும் இந்த தென்காசி மாவட்டம் ஆனது முதலில் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைந்து காணப்பட்டது அதன் பின்னர் தென்காசி தனியாக மாவட்டமாக பிரிக்கப்பட்டது. மேலும் தென்காசி புரிதலுடன் குற்றாலம் தென்காசி பகுதியுடன் காணப்பட்டது. மேலும் இது குற்றலமானது தமிழகத்தில் உள்ள பிற மாவட்ட மக்களையும் ஈர்க்கும் விதமாக காணப்படும் ஐந்தருவி புலியருவி போன்ற பல்வேறு விதமான அருவிகளும் காணப்படுகிறது.kutralam

மேலும் இந்த அருவியில் நீர்வரத்து தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியவுடன் மிகவும் அருமையாக காணப்படும் அதன் வரிசையில் தற்போது குற்றாலத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் மாவட்டத்திலுள்ள குற்றாலம் செங்கோட்டை குண்டாறு விதி மீறும் தனியார் நீர்வீழ்ச்சிகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பதால் தனியார் நீர்வீழ்ச்சிகளில் மக்கள் குவிவதால் இத்தனை நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது மேலும் விதிமீறி சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் தனியார் நீர்வீழ்ச்சிகளில் ஆய்வு செய்ய வட்டாட்சியருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

From around the web