அடுக்கம்பாறையில் அரங்கேறிய 7 பேர் உயிரிழப்பு அறிக்கை தர உத்தரவு!

வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் 7 பேர் இறப்பு குறித்து விரிவான அறிக்கை தர உத்தரவு!
 
அடுக்கம்பாறையில் அரங்கேறிய 7 பேர் உயிரிழப்பு அறிக்கை தர உத்தரவு!

மக்கள் மத்தியில் கண்ணுக்கு தெரியாமல் வளர்ந்துள்ள ஆட்கொல்லி நோய் காணப்படும் கொரோனாக்கு எதிராக நாடுகள் பலவும் பல்வேறு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்து பயன்படுத்துகின்றனர். அந்த படி இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. மேலும் மத்திய அரசின் சார்பில் இந்த கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மாநில அரசு  மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கியுள்ளது .இதனால் பலரும் வரிசையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

oxegen

 தடுப்பூசி போட்டுக்கொள்வது தமிழகம் மிகக் குறைவான இடத்தை பெற்று தமிழகத்தில் உள்ளவர்கள் தடுப்பூசிக்கு அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பல மருத்துவமனைகளில் தடுப்பு பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் ஒரு சில மருத்துவமனைகளில் ஆட்கொல்லி நோயான கொரோனாக்கு எதிராக நோயாளிகள் போராட முடியாமல் உயிரிழக்கின்றனர். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால் சில தினங்களாக இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு காணப்படுகிறது.இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை யில் சில தினங்களுக்கு முன்பாக 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் அவரது உறவினர்கள் ஆக்சிசன் பற்றாக்குறையினாலும் முறையாக ஆக்சிசன் செலுத்தவில்லை என்றும் புகார் அளித்திருந்தனர்.  இந்நிலையில் அந்த ஏழு பேரில் கொரோனா நோயாளிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு ஆய்வு நடத்திய மத்திய கல்வி இயக்குனர் நாராயண பாபு தற்போது அதிரடி உத்தரவினை அடுக்கம்பாறை  அரசு மருத்துவமனைக்கு பிறப்பித்துள்ளார். அதன்படி வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் ஏழு பேரிழப்பு குறித்தான விரிவான அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 7 பேர் உயிரிழப்பு காரணம் நோயாளிகள் விவரம் உள்ளிட்டவை குறித்த விரிவான அறிக்கையை தர உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் இறந்ததாக புகார் இந்நிலையில் தற்போது மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு ஆய்வு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web