"நெல் மூட்டைகள் பாதுகாப்பு" தமிழக அரசுக்கு உடனடி உத்தரவு!

நெல் மூட்டைகள் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
 
rice

தமிழகத்தில் உணவுப் பொருளாக காணப்படுவது அரிசியே ஆகும். இந்த அரிசியானது நெல்லிலிருந்து கிடைக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை, மேலும் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது தஞ்சை மாநகரமே. இந்த படி நம் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக நெல் சாகுபடி செய்வதே முதன்மையான விவசாயமாக காணப்படுகிறது. ஆனால் மழைக்காலம் தொடங்கினால் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் உள்ள சேமித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் நாசமாகிகின்றன.highcourt

இதற்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காயவைக்க கொண்டு வரப்பட்ட நிலையில் நனைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் அளித்துள்ளார். மேலும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவதாக வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்துள்ளார்.

மேலும் தமிழக அரசு இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு மட்டுமின்றி வழக்கை அடுத்த ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.இதனால் தமிழக அரசு விறுவிறுப்போடு இந்த நெல் சாகுபடியை குறித்தும் நெல் மூட்டைகள் பாதுகாப்பு குறித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web