ஓபிஎஸ் போர்க்கொடியும், சேகர் ரெட்டி வழக்கு தள்ளுபடியும் எதேச்சையா?

 

கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சேகர் ரெட்டி. இவர் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் நெருங்கிய நண்பர் என்றும் இருவருக்குமிடையே பண பரிமாற்றங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது 

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு சேகர் ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவர் உள்பட 6 பேருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் சிக்கவில்லை என சிபிஐ கூறியதை அடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது 

தற்போது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் திடீரென ஈபிஎஸ்க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சேகர் ரெட்டி வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதையும் இணைத்து பார்க்கும்போது இரண்டிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் ஆசியால்தான் ஓபிஎஸ் திடீரென தனது போராட்டத்தை தொடங்கியுள்ளார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. நீட்தேர்வு உள்பட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கு ஈபிஎஸ் தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து அவரை ஓரங்கட்டிவிட்டு ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் சேகர் ரெட்டி வழக்கின் தள்ளுபடியும் ஓபிஎஸ் திடீர் போராட்டமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web