அதிமுக அரசின் சாதனைகள் குறித்து விளக்கும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்!

அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டார்கள்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.234 தொகுதிகளிலும் தேர்தல் வேலைகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள  அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட  அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து  போட்டியிட உள்ளார்.

admk

மேலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்நிலையில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள்.

அதன்படி 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டார்கள். மேலும் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் மகளிர் சுய உதவிக் குழு  பெற்ற கடனை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் முறைப்படுத்தும் குழு அமைத்து 50 ஆண்டுகால காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

From around the web