வேளாண் மசோதாவை கிழித்தெறிந்த எதிர்க் கட்சி எம்பிக்கள்: பாராளுமன்றத்தில் பரபரப்பு 

 

மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக எம்பிக்கள் தற்போது திடீரென மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அதிமுக திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றமே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இந்த மசோதா குறித்து பேசிய வேளாண் அமைச்சரை பேசவிடாமல் எதிர்க் கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். ஒரு கட்டத்தில் அவையின் உறுப்பினர்கள் வேளாண் மசோதாவை கிழித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

புதிய வேளாண் மக்கள் விவசாயத்துக்கு எதிரான கருப்புச் சட்டம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் இந்த மசோதாக்களால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமையாக்கபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web