நகைச்சுவையுடன் விழிப்புணர்வை வழங்கியவர் எதிர்க்கட்சித் தலைவரின் இரங்கல்!

மக்களுக்கு நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் தந்தவர் நடிகர் விவேக் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின்!
 
நகைச்சுவையுடன் விழிப்புணர்வை வழங்கியவர் எதிர்க்கட்சித் தலைவரின் இரங்கல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அறிவித்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது .தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளன. மேலும் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளன. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

vivek

மேலும் கடந்த முறை போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். இந்நிலையில் அவர் தற்போது சின்ன கலைவாணருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் மத்தியில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் அனைத்து மக்களையும் சோகத்தில் தள்ளியது. இந்நிலையில் நடிகர் விவேக்கிற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதன்படி நடிகர் விவேக் மக்களுக்கு நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் வழங்கியவர் என்றும் கூறினார். மேலும் மரம் நடுதல் போன்ற  சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் ஈடுபடுத்தி கொண்டவர் விவேக் என்றும் அவர் கூறினார். மேலும் பல சாதனையை நிறைவேற்றும் ஆற்றல் படைத்த வரை இயற்கை அவசரமாக ஏன்? என்றும் என்றும் கூறினார்.இதுபோன்று அதிமுக சார்பிலும் முதல்வர் துணை முதல்வரும் சின்ன கலைவாணர் விவேக் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web