ஜெயலலிதா ஆட்சியை விட எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் அதிகம் கூறும் எதிர்க்கட்சித் தலைவர்!

பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் கேபி முனுசாமி குறித்து விமர்சனம் செய்கிறார் மு க ஸ்டாலின்!
 
ஜெயலலிதா ஆட்சியை விட எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் அதிகம் கூறும் எதிர்க்கட்சித் தலைவர்!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலம் பல்வேறு ஏற்பாடுகள் ஏற்படுகிறது. மேலும் தமிழகத்தில் பல கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க உள்ளன. எந்த ஒரு கூட்டணி 234 தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளரை அறிவித்து தனித்து போட்டியிட உள்ளது நாம் தமிழர் கட்சி.

dmk

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று காலை முக ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் கூறினார்,

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை விட எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் அதிகம் உள்ளது என கூறினார். மேலும் 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழலை விட தற்போது பழனிசாமி ஆட்சியில் அதிக ஊழல் நடந்துள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் எம்பி பதவி இருக்கும்போதே எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடுகிறார் கேபி முனுசாமி  எனவும் தனது தேர்தல் கூறினார். எல்லாவற்றிலும்30 சதவிதம் கமிசன் வாங்கும் கேபி முனுசாமி அமைச்சர் போல செயல்பட்டு வருகிறார் எனவும் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web