வாரிசு அரசியலுக்கு வாயடைக்கும் பதில் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின்!

முதல்வர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என்று கூறும் எதிர்க்கட்சித் தலைவர்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நெருங்கிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியாகஉள்ள அதிமுக கட்சியானது தன்னுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சி என்று அழைக்கப்படும் பாமக கட்சி இணையும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

stalin

இதற்கு போட்டியாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக கட்சிகளை கூட்டணியில் வைத்துள்ளது. இன்று காலை அந்தந்த கட்சி தலைவர்கள் ஒவ்வொரு பகுதியில் சென்று அப்பகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தனர். இன்று காலையில் முதல்வர் பழனிசாமி வாரிசு அரசியலை பற்றி கூறினார்.

அதற்கு எதிராக  தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கருது கூறிகிறார். அவர் வாரிசு அரசியல் என பன்னீர்செல்வத்தின் மகனை தான் கூறுகிறார் முதல்வர் பழனிசாமி கூறுகிறார்  எனவும்  முதல்வர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார் எனவும் மு க ஸ்டாலின் கூறுகிறார். மேலும் முதல்வர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கூறுகிறார்.

பதவிகளுக்கு துரோகம் செய்த முதல்வரை தான் கடவுள் தண்டிப்பார் எனவும் ஸ்டாலின் கூறினார் மேலும் ஸ்டாலினே கடவுள் தண்டிப்பார் என கூறியதற்கு எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் முதல்வருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

From around the web