மோடி கூறிய கருத்துக்கு எதிர்க் கட்சித் தலைவர் விளக்கம்!

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுகுறு தொழில்கள் நலிந்து விட்டதாக எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூறினார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்கட்சியாக உள்ள திமுகவுடன் கூட்டணி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் திமுக சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

dmk

மேலும் அவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார்.  அவர் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் திமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு பற்றி கூறிய மோடி பதிலாக பதில் கூறும் விதமாக முகஸ்டாலின் பிரச்சாரத்தில் கூறினார் . பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக உள்ளது எனவும் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கூறினார். மேலும் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் சிறு குறு தொழில்கள் நலிந்து விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூறினார்.

மேலும் அவர் பிரச்சாரத்தில் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, வால்பாறை வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டார்.மேலும் உடுமலைப்பேட்டையில் தக்காளிச்சாறு தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறினார். இதுபோன்ற ஸ்டாலின் கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web