தேர்தல் அதிகாரிகளுடன் எதிர்க்கட்சிகள் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு வாதம்!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் இருக்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. மேலும் ஆட்சியில் உள்ள அதிமுகவானது தன்னுடன் கூட்டணியாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கட்சி வைத்துள்ளது. எதிர்கட்சியான திமுக கட்சி பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

இதன் மத்தியில் தேர்தல் ஆணையம் ஆனது நேற்றைய தினமே வேட்புமனு தாக்கல் கடைசி தினம் என அறிவித்த நிலையில் பல கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். அந்த வேட்பு மனுக்களை இன்று தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது எனவும் திமுக வேட்பாளர் சின்னம்மாள் வேட்பு மனு ஏற்கப்பட்டது எனவும் தகவல் வெளியானது.
இதன் மத்தியில் திருமங்கலத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் எதிர்க் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தரப்பில் கூறுகின்றனர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்படுவதாகவும் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது.