தமிழக அரசின் தளர்வுகள் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்: என்னதான் செய்யணுமாம்?

இபாஸ் ரத்து உள்பட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த எதிர்க்கட்சிகள் தற்போது தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தவுடன் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியதை பார்ப்போம் திமுக பொருளாளர் துரைமுருகன்: 144 தடை விதித்தும், 100 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவித்துள்ளது அரசின் தெளிவில்லாத முடிவை காட்டுகிறது. கொரோனா தமிழகம் வந்தால் சரி செய்து விடுவோம் என சட்டப்பேரவையில் கூறிய முதமைச்சரால், இன்று
 

தமிழக அரசின் தளர்வுகள் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்: என்னதான் செய்யணுமாம்?

இபாஸ் ரத்து உள்பட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த எதிர்க்கட்சிகள் தற்போது தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தவுடன் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியதை பார்ப்போம்

திமுக பொருளாளர் துரைமுருகன்: 144 தடை விதித்தும், 100 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவித்துள்ளது அரசின் தெளிவில்லாத முடிவை காட்டுகிறது. கொரோனா தமிழகம் வந்தால் சரி செய்து விடுவோம் என சட்டப்பேரவையில் கூறிய முதமைச்சரால், இன்று வரை சரி செய்ய முடியவில்லை. ஊரடங்கால், திமுகவின் தேர்தல் பணியை முடக்கி விட முடியாது

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி: ஊரடங்கு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஆரம்பம் முதலே ஒரு தெளிவின்றி இருக்கின்றது. ஒருபுறம் 144 தடை உத்தரவு, மறுபுறம் பல்வேறு தளர்வுகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் மட்டுமே செயல்பட வேண்டும் என்கிற அடிப்படையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்: அரசியல் உள்நோக்கத்தோடு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுபடுத்த முடியாது என சுகாதாரத் துறையே தெரிவித்துள்ள நிலையில், இந்த 144 தடை அரசின் உள்நோக்கை காட்டுகிறது. எனவே சர்வாதிகார போக்குடன் அரசு செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்

தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு இன்னும் என்னதான் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From around the web