திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு: பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி 

 

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் மட்டுமின்றி திமுகவுடனும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அணிகள் மாறலாம் என்றும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு இறுதிப்பட்டியல் வரும்வரை கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் சமீபத்தில் துரைமுருகன் கூறியிருந்தார் என்பது தெரிந்ததே 

அந்த வகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி அப்படியே சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதே தற்போதைய அரசியல் நிலையாக உள்ளது 
இந்த நிலையில் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, திமுகவுடனும் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அக்கட்சியின் முக்கிய பிரமுகரான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதி செய்துள்ளார் 

இன்று அவர் அளித்த பேட்டியின் போது ’வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் மட்டுமல்ல திமுக உடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணிகள் மாறும் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் பாஜக அங்கம் வகிக்கும் கட்சியே தமிழகத்தில் அமையும் என்றும் பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web