தாஜ்மஹால் உள்பட முக்கிய சுற்றுலாதலங்கள் திறப்பு: என்னென்ன வழிகாட்டி நெறிமுறைகள்
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் நாடு முழுவதும் அனைத்து கடைகள், ஆலயங்கள், பள்ளி கல்லூரிகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு இருந்தது
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் நாடு முழுவதும் அனைத்து கடைகள், ஆலயங்கள், பள்ளி கல்லூரிகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்துமே திறக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

அந்த வகையில் அடுத்த கட்டமாக தற்போது சுற்றுலா தலங்களை திறக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் வரும் 21ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொல்பொருள் ஆய்வுத்துறை இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் ’தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், சுற்றுலா தலங்களின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது 

தாஜ்மகாலை பார்க்க வழங்கப்படும் நுழைவுச் சீட்டுக்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுலா பயணியும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கூறியுள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை, தாஜ்மஹாலை பார்வையிட நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்து உள்ளது

தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளதையடுத்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது 

From around the web