நான்கு மாதம் மட்டுமே அனுமதி மற்றும் நான்கு மாதம் மட்டுமே மின் இணைப்பு!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்திக்கு நான்கு மாதம் மட்டுமே அனுமதிக்க உள்ளதாக அனைத்து கட்சிகள் சார்பில் விளக்கம்!
 
நான்கு மாதம் மட்டுமே அனுமதி மற்றும் நான்கு மாதம் மட்டுமே மின் இணைப்பு!

தமிழகத்தில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா மிகவும் வீரியமாக காணப்படுகிறது. மேலும் இந்த கொரோனா நோய்க்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஆக்சிஜன் தேவைப்படுகிறது, ஆனால் தற்போது இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. மேலும் ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகளும் கண்முன்னே தெரிகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில்  ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவாமல் இருக்க தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடுத்துள்ளதுsterlite

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறக்க வேண்டும் என்று கூறியிருந்தது.இன்று காலை தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டமானது நடைபெற்றது. மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவெடுத்துள்ளதாக பரப்புகிறது. அதன்படி தமிழகத்தில் ஆக்சிசன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்துள்ளது .மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதம் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க முடிவு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நான்கு மாதம் மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்இணைப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

From around the web