50 சதவீத சுற்றுலாப்பயணிகளுக்கு மட்டுமே அனுமதி!புதிய கட்டுப்பாடு விதிகள்!

கொரோனா பரவல் காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!
 
50 சதவீத சுற்றுலாப்பயணிகளுக்கு மட்டுமே அனுமதி!புதிய கட்டுப்பாடு விதிகள்!

தமிழகத்தில் சில நிலாவாக நாட்களாக அனைவரும் பேசும் ஒரு வாய்ச் சொல்லாக மாறியது கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி நோயான கொரோனா  நோய். இந்த கொரோனாநோயானது முதன்முதலில் அண்டை நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் கொரோனா  அதிகரித்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை மாகாணத்தில் நோய் தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

corona

மேலும் கோயம்புத்தூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் கொரோனா  நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி முகக் கவசம் அணிவது கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. தற்போது கோவை சுற்றுலா பயணிகளுக்கு தற்போது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் கொரோனா  காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல புதிய கட்டுப்பாடுகளை வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஐந்து பேர் கொண்ட குழுக்களாக மட்டுமே அருவிக்கு செல்லும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் வருகை புரியும் 2000 சுற்றுலா பணிகளில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விடுமுறை அல்லாத நாட்களில் சராசரியாக வருகை புரியும் 1500 பயணிகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது வனத்துறை.இத்தகைய கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டாலும் கொரோனா  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web