3 நாட்களில் வெறும் 43 லட்சம் மட்டுமே காணிக்கை: திருப்பதியின் சோக நிலைமை

திருப்பதியில் உண்டியல் காணிக்கை உள்பட அனைத்து காணிக்கைகளும் சேர்த்து தினமும் 3 கோடி வரை காணிக்கைகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது மூன்று நாட்களிலும் சேர்ந்து வெறும் 43 லட்சம் ரூபாய் மட்டுமே காணிக்கை மூலம் வருவாய் வந்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திறக்கப்பட்டதை அடுத்து முதலில் கோவில் ஊழியர்களும், அதன் பின்னர் உள்ளூர்
 
3 நாட்களில் வெறும் 43 லட்சம் மட்டுமே காணிக்கை: திருப்பதியின் சோக நிலைமை

திருப்பதியில் உண்டியல் காணிக்கை உள்பட அனைத்து காணிக்கைகளும் சேர்த்து தினமும் 3 கோடி வரை காணிக்கைகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது மூன்று நாட்களிலும் சேர்ந்து வெறும் 43 லட்சம் ரூபாய் மட்டுமே காணிக்கை மூலம் வருவாய் வந்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திறக்கப்பட்டதை அடுத்து முதலில் கோவில் ஊழியர்களும், அதன் பின்னர் உள்ளூர் பக்தர்களுக்கும் வெளியூர் பக்தர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது

80 நாட்களுக்கு பிறகு ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டதால் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு இருந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் திருப்பதி கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை ரூபாய் 43 லட்சம் மட்டுமே என்பது திருப்பதி தேவஸ்தான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

தற்போது குறைவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் தான் உண்டியல் வருமானமும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பணக்கார சாமிகளில் ஒன்றாக இருந்த திருப்பதிக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் நிலைமைக்கு கேட்கவா வேண்டும் என்கிறனர் நெட்டிசன்கள்

From around the web