28 பேர் மட்டுமே உயிரிழப்பு, ஒரு கோடி பேருக்கு பரிசோதனை: கொரோனாவுக்கு டாட்டா சொன்ன தமிழகம்!

 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன் 5000க்கும் மேல் இருந்தது. மேலும் தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். இந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதால் தமிழகம் மெல்ல மெல்ல கொரோனாவில் இருந்து விடுதலையாகிறது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 2348 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 736,777 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 621 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 28 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 11272 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும் தமிழகத்தில் இன்று 2413 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 706,444 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 79,388 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 100,52,393 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web