34 இடங்களுக்கு வெறும் 12 இடங்களே ஒதுக்கீடு: ராமதாஸ் கண்டனம்!

ஓபிசி இட ஒதுக்கீட்டை 27 சதவீதமாக குறைத்து சமூக நீதிக்கு எதிரானது என்று ராமதாஸ் கூறியுள்ளார்!
 
34 இடங்களுக்கு வெறும் 12 இடங்களே ஒதுக்கீடு: ராமதாஸ் கண்டனம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவித்த தேதிப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. தமிழகத்தில் மிகவும் மக்கள் மனதில் செல்வாக்கு பெற்றுள்ள ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக வைத்து சந்தித்துள்ளது. மேலும் அதிமுக சார்பில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேலும் பாமக சார்பில் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்கள்.

ramadass

மேலும் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இந்நிலையில் தற்போது ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் தொழில் பழகுநர் நியமனத்தில் இட ஒதுக்கீடு குறித்து அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் மத்திய பொதுத்துறை நிறுவன தொழில் பழகுநர் நியமனத்தில் ஓபிசி இட ஒதுக்கீடு குறைப்பு பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஓபிசி இட ஒதுக்கீட்டை 27 சதவீதமாக குறைத்து சமூகநீதிக்கு எதிரானது என்றும் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் சென்னை உர நிறுவனத்தில் 45 தொழில் பழகுநர்களை தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் ஓபிசி மக்கள்தொகை 76% என்பதால் 45 தொழில் பல இடங்களில் 34 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் 34 இடங்களுக்கு பதிலாக வெறும் 12 இடங்களை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ள அநீதியை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தொழில் பழகுநர் நியமனத்தில் ஒபிசியினருக்கு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

From around the web