ஆன்லைன் மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகள்: சுகாதாரத்துறை அசத்தல் திட்டம்!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் குணமாகி வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் தினந்தோறும் மிக அதிகமான நபர்களுக்கு இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு அவர்களுடைய கொரோனா பரிசோதனை முடிவை ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இதற்காக பிரத்யேகமாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை இணைய தளத்தை
 

ஆன்லைன் மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகள்: சுகாதாரத்துறை அசத்தல் திட்டம்!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் குணமாகி வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் தினந்தோறும் மிக அதிகமான நபர்களுக்கு இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு அவர்களுடைய கொரோனா பரிசோதனை முடிவை ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது

இதற்காக பிரத்யேகமாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை இணைய தளத்தை தொடங்கி உள்ளது. கொரோனா பரிசோதனை செய்ய வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஐடி எண் கொடுக்கப்படும். அந்த எண்ணை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் சென்று பரிசோதனை முடிவை அறிந்து கொள்ளலாம். பரிசோதனை முடிவை தெரிந்து கொள்வதற்காக மீண்டும் ஒருமுறை பரிசோதனை மையத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

ஒருவேளை கொரோனா பாசிட்டிவ் என ஆன்லைன் மூலம் தெரிந்து ஏற்பட்டாலும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு இருங்கள் என்றும் உங்களை அரசு அதிகாரிகள் மொபைல் போனில் தொடர்பு கொண்டு தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது

இதே நடைமுறையை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

From around the web