ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார் 

 

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார் 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன் வாங்க முடியாத காரணத்தினால் ஒரு சில மாணவர்களும், ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என்ற காரணத்தினால் ஒரு சில மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டதையடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன 

மேலும் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார் 

தமிழகத்தில் செப்டம்பர் 12 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web