முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் வெங்காயங்கள் வீச்சு: பெரும் பரபரப்பு!

 

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருப்பது இல்லத்தரசிகளுக்கு மாபெரும் அதிர்ச்சியாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூபாய் 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை ஆகிக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்காயம் மட்டுமின்றி உருளைக்கிழங்கும் விலை ஏறி இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர் 

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொள்ள கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டமொன்றில் வெங்காயங்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பீகாரில் தற்போது இரண்டு கட்ட சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து மூன்றாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி என்ற மாவட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்டார் 

அவர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் திடீரென வெங்காய வீச்சு சம்பவம் நடைபெற்றதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் வெங்காயம் வீசியவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

From around the web