தொண்டையில் கடலைப்பருப்பு சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாப மரணம்: அதிர்ச்சி தகவல் 

 

திண்டுக்கல் அருகே ஒன்றரை வயது குழந்தை ஒன்று கடலைப்பருப்பு சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கூலித்தொழிலாளி விஜய் என்பவருக்கு தர்ஷனா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தார். இன்று தர்ஷனா தனது வீட்டில் கடலைப்பருப்பை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு கடலைப்பருப்பு அவருடைய தொண்டையில் சிக்கியது இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திடீரென மயங்கி விழுந்தார் 

இதனை பார்த்து தர்ஷனாவின் பெற்றோர் பதறி அடித்து தர்ஷனாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை மரணம் அடைந்தது

ஒன்றரை வயது குழந்தைக்கு கடலைப்பருப்பு போன்ற பொருட்களை சாப்பிட கொடுக்கக் கூடாது என மருத்துவர்கள் பலமுறை அறிவுறுத்தி இருந்தும் அதை அறியாமல் கடலைப்பருப்பை சாப்பிட்டால் குழந்தை ஒன்று இறந்தது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது

From around the web