ஒருவழியா தொட்டது மூவாயிரத்தை; ஆனால் மக்கள் சோகம்!காரணம் இதுதானா;

அண்ணாநகர் தேனாம்பேட்டையில் கொரோனா பாதிப்பானது மூவாயிரத்தை கடந்து உள்ளதாக கூறப்படுகிறது!
 
ஒருவழியா தொட்டது மூவாயிரத்தை; ஆனால் மக்கள் சோகம்!காரணம் இதுதானா;

தமிழகத்தின் தலைநகரமாக உள்ளது சென்னை மாநகரம். சென்னை ஆனது மக்களை வந்தாரை வாழவைக்கும் பூமியாக காணப்படுகிறது. மேலும் இத்தகைய சென்னையில் சென்றால் நாம் பிழைத்து விடலாம் என்ற எண்ணம் தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த சென்னை ஆனது தற்போது மிகப்பெரிய சோகத்தில் காணப்படுகிறது. காரணம் என்னவெனில் மக்களுக்கு கண்ணுக்கு தெரியாமல் வலம் வரும் ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறிப்பாக தலைநகரமான சென்னையில் தினந்தோறும் ஆயிரம் 2000 கடந்து அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

corona

சென்னை வாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் சென்னையில் தினந்தோறும் ஒரே குடியிருப்பில் வசிப்பவர்கள் கொரோனா கண்டறிவது அதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போது சென்னை மாநகரில் உள்ள இரண்டு மண்டலங்களில் கொரோனா நோய்த் தொற்றானது 3000 பாதிப்பை கடந்து மக்களை பேரதிர்ச்சியில் தள்ளியுள்ளது. அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் 3044 மற்றும் அண்ணாநகர் மண்டலத்தில் 3041  பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இவைகள் மட்டுமின்றி சென்னையில் உள்ள பிற  மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பானது ஆயிரங்களை கடந்து வேதனையை உருவாக்கியுள்ளது அதன்படி திருவிக நகரில் 2, 741 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.  ராயபுரத்தில் 2488 மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 2305 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 2026 அம்பத்தூரில் 1985 அடையாரில் 1913 பெருங்குடியில் 1490 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது இதனால் தலைநகரில் இந்த கொரோனா தலை விரித்தாடுகிறது கண் முன்னே தெரிய வந்துள்ளது.

From around the web