தக்காளி விலை கிலோ ஒரு ரூபாய்: டன்கணக்கில் கீழே கொட்டிய விவசாயிகள் போராட்டம்!

 

ஒரு பக்கம் வெங்காயத்தின் விலை கிலோ ரூபாய் 100 ரூபாய் வரை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் தக்காளியின் விலையும் அதற்கு நேர்மாறாக குறைந்துகொண்டே இருக்கிறது

தக்காளி ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு மட்டுமே இடைத்தரகர்கள் வாங்கியதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்து சந்தைக்கு கொண்டு வந்த தக்காளியை கீழே கொட்டி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற பகுதியில் உள்ள தக்காளி சந்தைக்கு இன்று தக்காளிகள் விவசாயிகள் தக்காளிகளை அறுவடை செய்து கொண்டு வந்தனர். ஆனால் இந்த தக்காளிகளை இடைத்தரகர்கள் கிலோ ரூபாய் ஒரு ரூபாய்க்கு மட்டுமே வாங்க முடியும் என்று கூறினர் 

tomota

நுழைவு கட்டணம், போக்குவரத்து செலவு ஆகியவை சேர்த்து தக்காளியின் அசல் விலை விவசாயிகளுக்கு 20 கிலோ கூடை ஒன்றுக்கு ரூபாய் 40 ரூபாய் என வருகிறது. ஆனால் தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனையானதால் கடும் நஷ்டம் அடைந்த விவசாயிகள் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு பதிலாக கீழே கொட்டி விடலாம் என்று கீழே கொட்டி அதை காலால் மிதித்து நசுக்கி போராட்டம் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

விவசாயிகளிடமிருந்து நேரடியாக தமிழக அரசு தக்காளியை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது


 

From around the web