ஒரு ரூபாய் அபராதம், கட்டவில்லை என்றால் 3 மாதம் சிறை: பிரசாந்த் பூஷன் வழக்கில் தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றவாளி என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் உச்ச நீதிமன்றம் தண்டனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஒரு ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்றும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த அபராதத்தை கட்டவில்லை என்றால் அவர் 3 மாதம் சிறை
 

ஒரு ரூபாய் அபராதம், கட்டவில்லை என்றால் 3 மாதம் சிறை: பிரசாந்த் பூஷன் வழக்கில் தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றவாளி என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் உச்ச நீதிமன்றம் தண்டனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஒரு ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்றும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த அபராதத்தை கட்டவில்லை என்றால் அவர் 3 மாதம் சிறை தண்டனை அனுப்பவேண்டும் அனுபவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முன்னதாக பிரசாந்த் பூஷன் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி மிஸ்ரா கருத்து தெரிவித்தபோது, ‘மன்னிப்பு கேட்பதால் என்ன தவறு இருக்கிறது என்றும் மன்னிப்பு கேட்பது பாவமா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்

இந்த நிலையில் சற்று முன் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி விஆர் கவே, கிருஷ்ண முராரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த தண்டனை விவரங்களை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு ரூபாய் அபராதத்தை பிரசாந்த் பூஷன் கட்டுவாரா அல்லது 3 மாதம் சிறை செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web